பொதுவாகவே மக்கள் அனைவரும் கிழிந்து போன ஆடைகள் மற்றும் சேர்ந்து போன காலணிகளை தூக்கி எறிந்து விட்டு புதிய ஆடைகள் மற்றும் காலணிகளை வாங்குவது வழக்கம். இதனை தவிர்த்து விட்டு அவற்றை பழுது பார்த்து மீண்டும் பயன்படுத்தினால் அவர்களுக்கு போனஸ் வழங்கும் திட்டம் ஒன்றை தற்போது பிரான்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய திட்டம் வருகின்ற அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒரு பழுது பார்ப்புக்கு ஆறு யூரோக்கள் முதல் 25 யூரோக்கள் வரை தள்ளுபடி வடிவில் போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் வருடத்திற்கு 7 லட்சம் டன் ஆடைகள் குப்பையில் வீசி எறியப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இப்படி வீணாவதை தடுப்பதற்கு வித்தியாசமான ஒரு திட்டத்தை பிரான்ஸ் அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனஸ் திட்டம் மூலமாக அரசுக்கு ஐந்து வருடத்திற்கு 154 மில்லியன் யூரோக்கள் செலவாகும். அரசின் இந்த திட்டம் அனைவருக்கும் பிடிக்கவில்லை. பலரும் இதை விமர்சித்து வரும் நிலையில் மறுபக்கம் இதற்கு ஆதரவு எடுத்துள்ளது. எனவே இனி பழைய துணியை தூக்கி வீசாமல் மீண்டும் தைத்து போட்டால் போனஸ் கிடைக்கும்.