அமெரிக்காவை சேர்ந்த பெண் ஈவ் டில்லே கால்சன் (35).  இவர் தனிமையில் களைத்துப்போயுள்ளாராம். இதனால் தன்னுடைய துணைக்காக வித்தியாசமான விளம்பரம் ஒன்றை செய்துள்ளார். அதாவது இவர் தகுந்த மாப்பிள்ளை யாராவது தேடி கொடுத்தால் அவர்களுக்கு 5 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 4.10 லட்சம்) தருவதாக விளம்பரம் செய்துள்ளார்.

மேலும் அதில் அவர், “அவருடன் அதிக நாட்கள் இருக்க முடியாது. 20 வருடங்களில் விவாகரத்தாக வாய்ப்பு உள்ளது. 5 வருடங்களாக டேட்டிங் ஆப்ஸை முயற்சித்தேன் ஆனால் அதிர்ஷ்டம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.