லிதுவெனியா நாட்டின் தலைநகரான வில்னியஸ் நகரில் நோட்டோ ஒப்பந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள 31 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் உக்ரைன் அதிபர் தங்கள் நாட்டை நோட்டோவில் இணைத்துக் கொள்ள பல முடிவுகள் எடுக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் எதிர்காலத்தில் தான் உக்கிரன் இந்தக் கூட்டணியில் இணைய முடியும் என்று நோட்டோ தலைவர்கள் கூறி முடித்து விட்டனர்.

இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது உக்கரைன் அதிபரின் பெயரை கூறுவதற்கு பதிலாக ரஷ்ய அதிபர் புதின் பெயருடன் குழப்பிக்கொண்டு வோலோடிமிர் என்பதற்கு பதிலாக விளாடிமிர் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு ஜெலேன்ஸ்கி என்று தன்னை அவர் திருத்தி கொண்டாலும் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.