ட்விட்டரில் மோட்டிவேஷன் வீடியோ ஒன்று 80 லட்சம் பார்வையாளர்களை கடந்து இணையதள வாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இன்றைய காலத்தில் ஒருவர் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பணம், அதற்கான கால சூழ்நிலை,  இவற்றையெல்லாம் தாண்டி அதை நிகழ்த்துவதற்கான மோட்டிவேஷன் என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அப்படி வாழ்க்கையில் நம்மை முன்னேற்றம் வகையிலான மோட்டிவேஷன் வீடியோ ஒன்று ட்விட்டரில்  வைரலாகி வருகிறது. அதில், நபர்  ஒருவர் தனது கையில் இரண்டு லைட்டர்களை பத்தவைத்து காண்பிக்கிறார்.

அதன் பின்பு ஒரு லைட்டரை கண்ணாடி டம்ளர் உள்ளே வைத்து அதனுள் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றுகிறார். ஒவ்வொரு முறை தண்ணீர் ஊற்றும் போதும் வாழ்க்கையில் மனிதர்கள் கடக்க கூடிய பல விதமான பிரச்சனைகளை குறிப்பிட்டு இறுதியாக அந்த லைட்டர் தண்ணீருக்குள் மூழ்கி மனிதன் மிகவும் துன்புற்று வாடி சோர்ந்து போயிருக்கிறான் என்பதை குறிக்கிறார். மேலும் அதிலிருந்து மீண்டு வருவதற்காக தொடர்ச்சியாக லைட்டரை பற்ற வைக்க முயல்கிறார். ஆனால் அது பற்றாமல் போகிறது.

இன்னொரு லைட்டர் மூலம் பற்ற வைப்பதன் மூலம் அது எரிகிறது. இதன் மூலம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒரு சின்ன ஸ்பார்க் கிடைத்தால் போதும் அந்த சின்ன ஸ்பார்க் கொடுக்கக்கூடிய ஒரு நட்பு வட்டாரம் நம்மிடம் இருந்தால் போதும் வாழ்க்கையில் எங்கோ சென்று விடலாம் என குறிப்பிட்டுள்ளார். அனைவரிடமும் அன்பாக இருங்கள் என பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவானது twitter-ல் 80 லட்சம் பார்வையாளர்களை கடந்து அந்த நபருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.