இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் காண்போரை பயமுறுத்தும் வகையில் இருக்கும். அதன்படி சமீபத்தில் பெங்களூரில் இருந்து வெளியான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில், ஓடிக்கொண்டிருக்கும் ஸ்கூட்டரில் கால் வைக்கும் ஃபுட் ரெஸ்ட்டில் சிறு குழந்தை ஒன்று நிற்பது போலவும் பெற்றோர்கள் அந்த ஸ்கூட்டரை போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் போட்டி செல்வது போலவும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவில் இருக்கும் பெண்மணி ஹெல்மெட் எதுவும் அணியாமல் தன்னுடைய பக்கவாட்டில் குழந்தையை பிடித்துக்கொண்டு சிறிதும் பயமில்லாமல் பொறுப்பற்ற வகையில் செல்கின்றார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.