தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முன்பு மாணவர்கள் வைத்திருக்க வேண்டிய விவரங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். அதன்படி ஜாதி சான்றிதழ், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான உறுதி கடிதம், மாணவர்களின் கல்வி மேலாண்மை தகவல் மைய எண் எனப்படும் இ எம் ஐ எஸ் என், ஆதார் எண், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை வைத்துக்கொண்டு மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு இணையதளத்தில் ஜூன் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு 500 ரூபாயும் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 250 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணைய வழியில் விண்ணப்பிக்க முடியாத மாணவர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியல் செயற்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவு குறித்து மாணவர்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் 1800-425-01110 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.