தமிழகத்தில் கோடை வெயிலின்  தாக்கத்தினால் கடும் வெப்ப அலை வீசுகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதன் பிறகு தமிழகத்தில் இன்று திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நெல்லை, ஈரோடு, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 14 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் இதேப்போன்று நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஈரோடு, நெல்லை, விருதுநகர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.