கேரளாவின் பல மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. க்யூலெக்ஸ் இனத்தைச் சேர்ந்த கொசுக்களால் பரவும் இக்காய்ச்சல், 1937ஆம் ஆண்டு உகாண்டாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. தலைவலி, உடல்வலி, வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும். இதுவரை இக்காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை