ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற தொடங்கியதில் இருந்து பெண்களுக்கு எதிரான சட்டங்கள் பல அரங்கேற்றப்பட்டது. இதனால் பெண்களின் சுதந்திரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தலிபான் அரசின் பொதுப்பணித்துறை துணை அமைச்சர் தீன் முஹம்மத் கூறுகையில் “95% ஆப்கான் மக்கள் பெண்கள் வேலைக்கு செல்வதை விரும்பவில்லை. ஐந்து சதவீத மக்களே வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர்.

அவர்களும் வெளிநாட்டில் இருப்பவர்களால் தூண்டப்படுகின்றனர். கணவனை இழந்த ஆயிரம் பெண்களுக்கு இஸ்லாமிய அமீரக தலைவர் பிறப்பித்த உத்தரவின்படி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமான சட்டங்கள் கலாச்சாரங்கள் உள்ளது. எனவே மேற்கத்திய நாடுகள் அவர்களது சட்டங்களை ஆப்கானிஸ்தான் மீது திணிக்க முயற்சிக்கக் கூடாது” என கூறியுள்ளார்.