குடிநீர் மற்றும் உணவுக்காக வன விலங்குகள் ஊருக்குள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒருபக்கம் யானை, மான், கரடிகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் நடந்துவர, இப்போது சிறுத்தைப் புலி கூட நகரப்பகுதிக்குள் நுழைந்தது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த சிறுத்தையை தெரு நாய்கள் பூனை என தவறாக எண்ணி துரத்திச் சென்ற காட்சி, நெட்டிசன்களுக்கு பெரும் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியாகியுள்ள சி.சி.டி.வி. காட்சியில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு சிறுத்தைப் புலியை, சில தெருநாய்கள் வழக்கம்போல தனது பகுதியை காப்பாற்றும் எண்ணத்தில் விரட்டுகின்றன. தொடக்கத்தில், அந்த விலங்கு ஒரு பெரிய பூனை என நினைத்து துரத்திக்கொண்டு சென்ற நாய்கள், சிறிது நேரத்தில் அது சிறுத்தையாக இருப்பதை உணர்ந்ததும், அதே வேகத்தில்  நாலாபுறமாக சிதறி  ஓடி தப்பிக்கின்றன. இந்த வீடியோ, “அது ஒரு பூனைதானே என நினைத்தன…” என்ற தலைப்பில் X – தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

“>

 

வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், பல்வேறு மீம்ஸ் மற்றும் விமர்சனங்களை பகிர்ந்துள்ளனர். ஒருவர், “அந்த நாய்கள் தாங்கள்தான் அந்த பகுதியில் தலைவர்கள் என நினைத்துவிட்டு நடந்துகொண்டார்கள். ஆனா உண்மை தெரிந்ததும் ஓட ஓட ஒரு வழி தெரியாமல் சிதறினார்கள்” என சிரிக்க வைத்துள்ளார்.

மேலும் ஒருவர், “அந்த கும்பலில் ஒரு நாய் மட்டும் திரும்பியே வரலை போல இருக்கு… அதான் சிறுத்தைக்கு சிக்கியிருக்க கூடும்” என வேதனையோடு பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி, சிரிப்பும் சிந்தனையும் ஏற்படுத்தி வருகிறது.