கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம், ஆலூர் தாலுகா பால்யா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதாப். இவரது மனைவி தாக்ஷாயினி. இவர்கள் திருமணம் செய்து கொண்டு வெறும் ஒரு மாதம்தான் ஆன நிலையில், தாக்ஷாயினிக்கு அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த உறவு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பிரதாப் அறிந்ததும், தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் எரிச்சலடைந்த தாக்ஷாயினி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் தயாரித்த உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக பிரதாப் அந்த உணவை சாப்பிடாமல் தவிர்த்ததால் உயிர்தப்பினார்.

தொடர்ந்து பிரதாப், இந்த சம்பந்தமாக ஆலூர் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் தாக்ஷாயினி மற்றும் அவரது கள்ளக்காதலனை கவனத்தில் கொண்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷம் கலந்து கொல்ல முயன்ற சம்பவம் தெரிய வந்ததும், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக திருமணம் செய்துகொண்ட பிறகும், இவ்வாறான கொடூர முயற்சியில் மனைவி ஈடுபட்டிருப்பது, கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சி மற்றுமின்றி  கவலையை  ஏற்படுத்தியுள்ளது. “ஒரு மாதத்தில் இதுவரை முழுமையான கல்யாண வாழ்கையேதொடங்கவில்லை , ஆனால் கொலை முயற்சி? இது எந்த அளவுக்கு கொடுமை ?” என பலரும் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.