சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அழகான அதே சமயம் அரசியல் ரீதியாக மிக முக்கியமான காணொளி வைரலாகி வருகிறது. ஒரு இந்து ஆலயத்தின் வளாகத்தில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்கள் மிகவும் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இந்த ஒற்றைக் காட்சி, “தமிழ்நாடு எப்போதும் மதத்தால் பிரியாது” என்ற உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்கிறது. மதங்களைக் கடந்து மனிதர்களாகவும், தமிழர்களாகவும் பிணைந்துள்ள இந்த மண்ணில், மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இது ஒரு தகுந்த பதிலடியாக அமைந்துள்ளது.
"You will never, ever in your entire life, rule over the people of Tamil Nadu. It can’t be done.” @RahulGandhi #DMK @mkstalin @Udhaystalin#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் pic.twitter.com/ZBbazfTA23
— Tr Gayathri Srikanth (@Tr_Gayathri) December 28, 2025
”உங்களால் ஒருபோதும் தமிழக மக்களை ஆள முடியாது” என்ற வாசகத்துடன் பகிரப்படும் இந்த வீடியோ, தமிழகத்தின் தனித்துவமான அரசியல் பண்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறது. இங்கு கோயில், மசூதி, தேவாலயம் என அனைத்தும் அனைவருக்குமானதாகவே பார்க்கப்படுகிறது. மூன்று மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் இந்த மண்ணில், மதவாத அரசியலைப் புகுத்தி ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க நினைக்கும் பாஜாக போன்ற கட்சிகளுக்கு இங்கு இடமில்லை என்பதை இந்த எளிய பெண்களின் புகைப்படம் மறைமுகமாக உணர்த்துகிறது. தமிழகத்தின் இந்த மத நல்லிணக்கமே அதன் மிகப்பெரிய பலம்!
