பத்து தல படத்தைத் தொடர்ந்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. நடிகர் சிம்பு STR48 படத்திற்காக, ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ கற்க வெளிநாடு சென்றிருந்தார். விரைவில் இந்த படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படம் வரலாற்று பின்னணியுடன் உருவாகவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் புது கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை நடிகர் சிம்பு பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.