பிரபல பாலிவுட் நடிகை இலியானா கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தனக்கான ஆண் குழந்தை பிறந்துள்ளது தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்க மூலம் அறிவித்துள்ளார். திருமணம் ஆகாமல் இருந்த இலியானா சமீபத்தில் தன் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்திருந்த நிலையில் இவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தங்கள் அன்பான மகனை இந்த உலகிற்கு வரவேற்பதில் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோம் என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது, என்று கூறி தங்களது மகனின் பெயர் koa phoenix Dolan என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இலியானாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.