ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அபாரமாகச் செயல்பட்டு, அந்த அணியை 194 ரன்களுக்குள் சுருட்டினர். ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 102 ரன்கள் குவித்து அணியை மீட்டெடுத்தாலும், அவர் அவுட்டானதும் அந்த அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் குர்னூர் ப்ரார் மற்றும் ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதனால் இந்திய அணிக்கு 195 ரன்கள் எளிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
What. A. Catch 🤯
Captain Shubman Gill with an absolute stunner of a grab 🫡
Updates ▶️ https://t.co/lCuohEZYAl #TeamIndia | #INDvAFG | @IDFCFIRSTBank | @ShubmanGill pic.twitter.com/jX2rAfSbtq
— BCCI (@BCCI) June 13, 2026
இந்த போட்டியின் 22-வது ஓவரில் ஹர்ஷ் துபே வீசிய பந்து, ஆப்கானிஸ்தான் வீரர் கஜன்ஃபரின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் இஷான் கிஷனை நோக்கிச் சென்றது. எதிர்பாராதவிதமாக இஷான் கிஷன் கைகளில் இருந்து அந்த கேட்ச் நழுவி கீழே விழுந்தபோது, அங்கிருந்த கேப்டன் சுப்மன் கில் சிறுத்தையைப் போலப் பாய்ந்து, பந்து தரையில் படுவதற்குள் ஒரு கையில் அசாத்தியமாகப் பிடித்து அசத்தினார். சுப்மன் கில்லின் இந்த மின்னல் வேக கேட்ச்சைப் பார்த்த ரசிகர்கள் மைதானத்தில் மிரண்டு போயினர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
