இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் தனித்துவமான வாழ்க்கை முறையைக் கண்டு வியந்த வெளிநாட்டுப் பெண் வேரா ப்ரோகோஃபேவா, இந்தியச் சாலைகளின் சுவாரசியமான காட்சிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். ஜெய்ப்பூரில் வசிக்கும் அவர், இந்தியர்களுக்குச் சாதாரணமாகத் தெரியும் சில விஷயங்கள், வெளிநாட்டினருக்கு எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது என்பதைப் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சாலைகளின் நடுவே எவ்வித பயமும் இன்றி சாதாரணமாக அமர்ந்திருக்கும் மாடுகளைக் காட்டி, உலக நாடுகளிலேயே இந்தியாவில் மட்டும்தான் இப்படி ஒரு நல்வாழ்வை மாடுகள் வாழ முடியும் என வியந்து பாராட்டியுள்ளார். மேலும், அந்த வீடியோவில் ஒரு இளைஞர் சைக்கிளில் அமர்ந்து கொண்டு, பெடல் மிதிக்காமல் முன்னால் செல்லும் வண்டியைப் பிடித்துக் கொண்டே வேகமாகச் செல்லும் சுவாரசியமான காட்சியையும் அவர் காட்டியுள்ளார்.
இந்தியச் சாலைகளுக்கே உரிய இந்த விநோதமான அடையாளத்தைக் கண்டு அவர் ஆச்சரியமடைந்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், “இந்தியர்களோட அன்றாட வாழ்க்கையை வெளிநாட்டவர் கண்ணோட்டத்தில் பார்ப்பது செம மாஸா இருக்கு” என நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
