சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் செய்வதற்காகவும், லைக்குகளைப் பெறுவதற்காகவும் இளைஞர்கள் சிலர் பொதுச் சாலைகளில் ஆபத்தான முறையில் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபட்டு விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், கிராமப்புறச் சாலை ஒன்றில் வாலிபர் ஒருவர் சினிமா ஹீரோ போல ஸ்டைல் காட்டி, அதிவேகமாக பைக் ஓட்டி வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குறுகலான அந்தச் சாலையில், தனது நண்பர் ஒருவரை கேமராவுடன் வீடியோ எடுக்கச் சொல்லிவிட்டு, அந்த வாலிபர் பைக் ஓட்டியுள்ளார். அப்போது, முன்னால் இருந்த ஒரு வளைவில் பைக்கை திருப்ப முயன்றபோது, அதிவேகத்தின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையை விட்டு விலகி நேராக அருகில் இருந்த விவசாய வயலுக்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.
खाली सड़क अक्सर बड़े हादसों का बुलावा देती है। सावधानी हटी, दुर्घटना घटी। नतीजा आपके सामने है।
.
.#BiharPolice #FollowTrafficRules #speedlimit #wearhelmet #bihar @BiharHomeDept @IPRDBihar pic.twitter.com/29QBp2H51s— Bihar Police (@bihar_police) June 10, 2026
இந்த விபத்தின் மொத்தக் காட்சியும் கேமராவில் பதிவாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சில நொடிகள் விளம்பரத்திற்காகத் தனது உயிரையே பணையம் வைத்து அந்த வாலிபர் செய்த இந்தச் செயல், நெட்டிசன்களிடையே கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. சாலை என்பது ஸ்டண்ட் காட்டும் இடம் அல்ல என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில், இந்த அதிரடி வீடியோவை பீகார் மாநில காவல்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளது. “சிறுபிள்ளைத்தனமான சில நொடிகள் பாராட்டுக்காக, உங்களது விலைமதிப்பற்ற உயிரை ஆபத்தில் தள்ளாதீர்கள்; போக்குவரத்து விதிகளை எப்போதும் மதியுங்கள்” என்ற விழிப்புணர்வுச் செய்தியுடன் போலீசாரால் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
