சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு சிசிடிவி வீடியோ, பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், ஓட்டுநர் இல்லாமல் ஒரு லாரி திடீரென நதியை நோக்கி நகர்ந்து செல்கிறது. இதைப் பார்த்த ஒரு நபர், லாரியின் எடையையும், அதன் வேகத்தையும் கணக்கில் கொள்ளாமல், தனது உடல் பலத்தால் அதை நிறுத்த முயற்சிக்கிறார்.
ஆனால், எடையில் மிகப்பெரிய லாரி அவரை சுவரோடு நசுக்கி, சுவரை உடைத்து, அவரையும் நதிக்குள் தள்ளிவிடுகிறது. இறுதியில், லாரியும் நதியில் விழுந்து மூழ்குகிறது. இந்தக் காட்சி, பார்க்கும் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவத்தைப் பார்த்த பலர், இந்த முயற்சியை முட்டாள்தனமான செயலாக விமர்சித்து வருகின்றனர். ஒரு நபர் தனி ஆளாக, இவ்வளவு எடை கொண்ட லாரியை நிறுத்த முயல்வது ஆபத்தானது மட்டுமல்ல, பொதுவான அறிவுக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
“>
இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளைத் தவிர்க்கவும், பாதுகாப்பை முதன்மையாகக் கருதவும் வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
