கடந்த ஆண்டு ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த நிலவி வந்த இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா தலைமையில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில், நிபுணர் குழு அளித்த பாதுகாப்பு அறிக்கையை ஆய்வு செய்த பிறகு, ஐபிஎல் 2026 போட்டிகளை நடத்த மாநில அரசு முறைப்படி அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, மார்ச் 28-ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் 19-வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க 35,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், பெண்களுக்குத் தனி வரிசை மற்றும் போட்டிகளுக்காக இலவச மெட்ரோ பயணம் போன்ற புதிய பாதுகாப்பு விதிமுறைகளைத் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.