இந்திய கிரிக்கெட்டில் தற்போது ஹாட் டாபிக் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி தான். சமீபத்தில் டெல்லியில் நடந்த ‘பிசிசிஐ நமன் விருதுகள் 2026’ விழாவில், வைபவ் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஒரு சுவாரசியமான கதையை உடைத்துள்ளார்.
ஐபிஎல் அறிமுகத்தின் போது, இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட் வைபவை அழைத்து, “உன்னுடைய கேம் பிளான் என்ன?” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்தச் சிறுவன் துளியும் பயமின்றி, “பெரிய பிளான்லாம் எதுவும் இல்ல சார்.. முதல் பந்திலேயே வாய்ப்பு கிடைத்தால் அதை வெளியே பறக்க விட வேண்டியதுதான் ” என கூலாகப் பதில் அளித்துள்ளார்.
சொன்னது போலவே மைதானத்தில் முதல் பந்திலேயே ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்துள்ளார்.
1.10 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்ட வைபவ், ஐபிஎல் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல், குஜராத் அணிக்கு எதிராக வெறும் 38 பந்துகளில் சதமடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த விழாவில் பேசிய வைபவ், கிரிஸ் கெயிலின் 175 ரன்கள் சாதனையை முறியடிப்பதே தனது லட்சியம் என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
14 வயதிலேயே இவ்வளவு தன்னம்பிக்கையுடன் ஆடும் இந்தச் சிறுவனைப் பார்த்து, “இவர் என்ன வீடியோ கேம் விளையாடுகிறாரா?” என சஞ்சு சாம்சனே வியந்து போயுள்ளார்.
