இந்திய கிரிக்கெட் வரலாற்றின் ‘மாஸ்’ ஜோடியான தோனியும் கம்பீரும், மீண்டும் ஒருமுறை இணையதளத்தையே அதிர வைத்துள்ளனர். அமிதாபாத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை வெற்றியைத் தொடர்ந்து, எப்போதும் சீரியஸாக இருக்கும் இந்திய பயிற்சியாளர் கௌதம் கம்பீரைப் பார்த்து, “கோச் சாப்.. இந்த சிரிப்பு உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு, உங்களோட அந்தத் தீவிரமும் சிரிப்பும் சேர்ந்தா அது ஒரு கில்லர் காம்போ!” என இன்ஸ்டாகிராமில் தோனி போட்ட கமெண்ட் தான் இப்போதைய டாப் ட்ரெண்டிங். இதற்குப் பதிலளித்த கம்பீர், “சிரிக்க இவ்வளவு பெரிய காரணம் இருக்கும்போது ஏன் சிரிக்கக்கூடாது?” எனப் பதிலளித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளார்.

​ஆனால், இதையெல்லாம் விட கம்பீர் சொன்ன ஒரு விஷயம் தான் இப்போ கிரிக்கெட் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு நேர்காணலில் பேசிய கம்பீர், “தோனி உலகக்கோப்பை ஃபைனலைப் பார்க்க வந்தது ரொம்ப மகிழ்ச்சி. அவர் என்னை சிரிக்கச் சொன்னார், ஆனா ஒருநாள் அவர் என் இடத்தில் (பயிற்சியாளராக) அமர வேண்டும் என்பதுதான் என் ஆசை. அன்று இதேபோல நான் அவருக்கு கமெண்ட் செய்வேன், அவர் டக்அவுட்டில் இருந்து சிரிப்பார்!” என வெடிகுண்டைப் போட்டுள்ளார். 2026 ஐபிஎல்-லில் 44 வயதிலும் சிஎஸ்கே-வுக்காக தோனி களம் காணத் தயாராகி வரும் நிலையில், கம்பீரின் இந்த “கோச்” அழைப்பு இந்திய கிரிக்கெட்டில் புதிய எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது!