இந்திய கிரிக்கெட் அணியில் சுமார் இரண்டு ஆண்டுகளாக இடமில்லாமல் தவித்த ஈஷான் கிஷன், திடீரென 2026 டி20 உலகக்கோப்பை அணிக்குள் நுழைந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, அணியிலேயே தொடர்ந்து நீடித்து வந்த ஜித்தேஷ் சர்மாவை ஓரங்கட்டிவிட்டு கிஷனை எடுத்தது பெரிய விவாதமானது. இந்நிலையில், இந்த அதிரடி முடிவுக்குப் பின்னால் இருந்த உண்மைக் காரணத்தை கேப்டன் சூர்யகுமார் யாதவ் போட்டுடைத்துள்ளார். “ஜித்தேஷை நீக்குவது உணர்வுப்பூர்வமாக கஷ்டமான முடிவாக இருந்தாலும், கிஷனிடம் இருக்கும் அந்த ‘X-Factor’ மற்றும் அவரது அதிரடி ஆட்டம் அணிக்குத் தேவைப்பட்டது” என சூர்யா ஓப்பனாகப் பேசியுள்ளார்.
VIDEO | PTI EXCLUSIVE: Indian T20 cricket team captain and two-time ICC T20 World Cup champion Suryakumar Yadav (@surya_14kumar), when asked about his decision to pick Ishan Kishan in the 2026 T20 WC squad, says, “The decision was largely based on instinct, though there was also… pic.twitter.com/tRgGcqwYNd
— Press Trust of India (@PTI_News) March 16, 2026
முக்கியமாக, அணித் தேர்வுக்கு முன்னதாக ஈஷான் கிஷனிடம் சூர்யா ஒரு சீக்ரெட் மீட்டிங் நடத்தியுள்ளார். “உன்னால் உலகக்கோப்பையை வென்று கொடுக்க முடியுமா?” என்று சூர்யா கேட்க, அதற்கு ஈஷான் கிஷன், “என்னை மட்டும் நம்புங்க கேப்டன், மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்!” என நம்பிக்கையோடு பதிலளித்துள்ளார். இந்த ஒற்றை வார்த்தைதான் சூர்யாவின் மனதை மாற்றியுள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து, ஃபார்முக்கு வந்த கிஷனின் இந்த ‘மரண கம்பேக்’ இப்போது இந்திய அணியின் மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது என சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்
