உத்தரபிரதேச மாநிலம் நடைபெற்று வரும் மாக மேளாவில், விலையுயர்ந்த சொகுசு கார்களில் வலம் வரும் சதுவா பாபா தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளார். ஆன்மீகவாதியான இவர், வழக்கமான துறவிகளைப் போலன்றி, சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மற்றும் போர்ஷே போன்ற அதிநவீன கார்களைப் பயன்படுத்துவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் காசி விஸ்வநாத் முக்தி தாமின் மடாதிபதியான இவரைப் பார்க்கவும், அவருடன் செல்ஃபி எடுக்கவும் பக்தர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இவரது ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டாலும், சதுவா பாபா இதை ஒரு கருவியாகவே பார்க்கிறார்.

“>

இதனால் “பொருட்களின் மீது பற்று வைக்காமல், அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை” என்பதே இவரது நிலைப்பாடாக உள்ளது. குதிரை சவாரி செய்வதிலும் ஆர்வம் கொண்ட இவருக்குச் சொந்தமாக விலை உயர்ந்த குதிரைகளும் உள்ளன. பாரம்பரிய ஆன்மீகத்தையும் நவீன கால வசதிகளையும் இணைத்து வாழும் இவரது தனித்துவமான பாணி, இந்த ஆண்டு மாக மேளாவின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது.