உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், பிறக்கும்போதே ஒரு விசித்திரமான மற்றும் வேதனையான உடல்நலப் பிரச்சனையுடன் பிறந்துள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு இரண்டு பிறப்புறுப்புகள் மற்றும் இரண்டு கருப்பைகள் இருந்துள்ளன. இதனால் சிறுவயது முதலே அவர் சிறுநீர் கழிப்பதிலும், குடல் இயக்கத்திலும் மலம் கழிப்பதிலும் துயரங்களைச் சந்தித்து வந்தார். சாதாரண மனிதர்களைப் போல இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியாமல் பல ஆண்டுகளாக அவர் நரக வேதனையை அனுபவித்து வந்தார்.

இந்த நிலையில், லக்னோவில் உள்ள மருத்துவர்கள் அந்தப் பெண்ணுக்கு ‘மறுவாழ்வு’ அளிக்க முன்வந்தனர். சவால்கள் நிறைந்த இந்தச் சிகிச்சையில், அடுத்தடுத்து 3 சிக்கலான அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.

இதன் மூலம் அந்தப் பெண்ணின் உடல் அமைப்பில் இருந்த குளறுபடிகள் சரிசெய்யப்பட்டு, இயல்பான நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த இளம்பெண் தனது வாழ்க்கையிலேயே முதல் முறையாக எவ்வித மருத்துவ உபகரணங்களோ அல்லது மற்றவர்களின் உதவியோ இன்றி, ஆரோக்கியமாக வாழத் தொடங்கியுள்ளார். சாத்தியமே இல்லை என்று நினைத்த காரியத்தைச் சாதித்துக் காட்டிய லக்னோ மருத்துவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.