உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், ஆக்சிஜன் குழாய்களுக்கு அருகே எலிகள் சுதந்திரமாக உலா வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் வார்டுகளில் நோயாளிகளின் படுக்கைகளுக்கு மிக அருகிலேயே எலிகள் ஓடுவதைக் கண்டு நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் கடும் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் அவர்கள் மருத்துவமனையில் நிலவும் இத்தகைய சுகாதாரமற்ற சூழல், ஏற்கனவே பலவீனமாக உள்ள நோயாளிகளுக்குத் தொற்று நோய்கள் பரவும் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, ஆக்சிஜன் குழாய்களை எலிகள் கடித்துச் சிதைத்தால் பெரும் விபத்து ஏற்படும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
गोंडा के मेडिकल कॉलेज के आर्थो वार्ड में डाक्टर भले ही देरी से आ रहे हो लेकिन चूहे जल्दी और आराम से दौड़ लगा रहे, ऑक्सीजन पाइप से मरीज के बैड तक आनंद में है। वीडियो वायरल हुई तो डीएम ने मेडिकल प्रशासन को दवा छिड़काव के आदेश दिए है, चूहे मरीजों का खाना खाकर खराब कर दे रहे हैं। pic.twitter.com/qctpGk3noz
— Harish Sharma (@Sharma39Harish) January 14, 2026
“>
இது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு முக்கியக் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மருத்துவமனையில் தூய்மையைப் பராமரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில் நிலவும் அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதாரக் குறைபாடுகள் குறித்த விவாதங்கள் மீண்டும் முன்னுக்கு வந்துள்ளன. இது நோயாளிகளின் உயிருக்கு இழைக்கப்படும் அநீதி எனப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
