சமூக ஊடகங்களில் பரபரப்பாக பகிரப்படும் ஒரு வீடியோ தற்போது நெட்டிசன்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி வருகிறது. இதில், ஒரு சிறுமி  பெரிய – சுமார் 20 அடி நீளமுள்ள மலைப்பாம்புடன் பயமின்றி விளையாடும் காட்சி இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோவில், வீட்டின் வெளியே உள்ள சோபா ஒன்றின் மீது ஒரு பெரிய மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து செல்லும் போது, ஒரு சிறுமி அதன் வாலில் அமர்ந்து அதை ஒரு பொம்மையாக கையாளுகிறாள். இந்தப் படத்தை அவரது குடும்பத்தினரே எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியிருப்பது அதிர்ச்சியை மேலும் பெருக்கியுள்ளது. @knowledgehub40 என்ற இன்‌ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளி, “இவ்வளவு சக்திவாய்ந்த உயிரினத்தை இவ்வளவு நெருக்கிச் செல்ல நீங்கள் துணிவீர்களா?” என்ற கேள்வியுடன் இணையத்தில் வேகமாக பரவுகிறது. இதற்கு இணையவாசிகள் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Knowledge Hub (@knowledgehub403)

“இது என்ன முட்டாள்தனம்? மலைப்பாம்பு விஷமில்லையென்றாலும், ஒரு அடியில் விளையாட்டை முடித்துவிடும்,” என ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“ஐயோ கடவுளே! மலைப்பாம்பு அந்த  சிறுமியை பிடித்தால் என்ன ஆகும்?” என மற்றொருவர் கவலையுடன் கேள்வியெழுப்புகிறார்.

மேலும் மலைப்பாம்புகள் பொதுவாக விஷம் இல்லாதவையாக இருக்கலாம். ஆனால் அவற்றின் வலுவான பிடியால் பெரிய உயிரினங்களையே விழுங்கும் திறன் கொண்டவை. அதனால், இப்படிப்பட்ட ஆபத்தான சூழலில் சிறுமியை அனுமதித்த பெற்றோர் மீது பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.