விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் டிராக்டர் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

தஞ்சை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி வேலவஸ்தா சாவடியில் நிறைவு பெற்றது. இதேபோன்று திருவாரூர், திருத்தணி, வந்தவாசி, பொன்னேரி, கரூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்றது.