தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிற கட்சியில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைப்பது மற்றும் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் பலர் இணைந்துள்ளனர்.
அதன்படி மோகனூர் மேற்கு ஒன்றிய துணை செயலாளராக இருந்த ஆர் வி ஆர் செந்தில்குமார் மற்றும் பரமத்தி ஒன்றிய அதிமுக வர்த்தகர் அணி செயலாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் செந்தில் பாலாஜி முன்னிலையில் இணைந்துள்ளனர். மேலும் இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
