நடிகர் விஜய் புதியதாக தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் இந்த கட்சியின் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை, இலவச படிப்பகம் போன்றவைகள் தொடங்கப்பட்டு செயப்படுத்தப்பட்டு வருகிறது. இலவச சட்ட ஆலோசனை மையமும் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தளபதியின் விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலமாக கும்மிடிப்பூண்டியில் 7 பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கி வீட்டு உபயோகப்பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஆட்சி அதிகாரம் இல்லாமலேயே நலத்திட்ட உதவிகளை செய்கிறோம், எங்களிடம் அதிகாரம் கொடுங்கள் நம்ம தளபதி அசத்துவார் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.