கடலூர் மாவட்டம் வேப்பூர் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் சங்கரின் மகள் சுஹாசினி. ஒன்பது வயதாகும் இவர் கடந்த ஜனவரி இரண்டாம் தேதி வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த தீப விளக்கில் இருந்த தீ ஆடையில் பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறுமியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிறு நீ சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனையில் சிறுமியின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.