சென்னையில் நடைபெற இருந்த லியோ படத்தின்  இசை வெளியீட்டு விழாவானது ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, நடிகர் விஜய் ரசிகர்கள் பல்வேறு வகைகளில் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டரில், “ஆடியோ லான்ச் இல்லைனா என்ன! ஆட்சிய புடிச்சிட்டா போச்சி!! என்ன நண்பா? என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் , திரிஷா நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் திரைப்படம் லியோ.