தொகுப்பாளினிக்கு மாலை போட்டு சர்ச்சையில் சிக்கிய கூல் சுரேஷ், மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜெயக்குமார் இயக்கத்தில் மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துள்ள சரக்கு திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கூல் சுரேஷ் தொகுப்பாளினிக்கு மாலை போட்டு சர்ச்சை கிளப்பினார். தற்போது கூல் சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் அந்த சகோதரி மீது விளையாட்டாக மாலை போட்டேன். அதற்காக மீண்டும் ஒரு முறை மன்னிப்புக்கேட்கிறேன். வறுமையில் தவிக்கிறேன். எனக்கு யாராவது ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்” என பதிவிட்டுள்ளார்.