சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் 5 வீரர்கள் பட்டியலை ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார்..

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் 5 வீரர்கள் பட்டியலை ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில், இந்திய அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி, அஷ்வின், ரோகித் சர்மா ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. ஹர்பஜன் சிங்கின் பட்டியலில் முதலில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் உள்ளார். இதுவரை 497 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள லியான், காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஹர்பஜன் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்மித் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஸ்மித் தொடர்ந்து சதம் அடித்து வரும் நிலையில், ஹர்பஜன் சிங் அவரை கவுரவித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீரர் ரிஷப் பந்த் 3வது இடத்தில் உள்ளார். டெஸ்ட் அணியில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமான இவர், கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார்.

ஹர்பஜன் சிங்கின் பட்டியலில் ஜடேஜா 4வது இடத்தில் உள்ளார். ஜடேஜா பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கலக்கி வருவதால் அவருக்கு இந்த இடத்தை ஹர்பஜன் அளித்துள்ளார். இதேபோல் இந்த பட்டியலில் இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் 5வது இடத்தை பிடித்துள்ளார். அதிரடி பேட்டிங் மற்றும் நல்ல பந்துவீச்சு ஆகியவற்றில் கலக்கும் ஸ்டோக்ஸ் ஒரு போட்டியின் முடிவைத் தனித்து மாற்றுவார்.

இந்த பட்டியலில்  அஸ்வின் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகின் நம்பர் ஒன் வீரரான அஸ்வின், ஹர்பஜனால் வெளியேற்றப்பட்டார். ஹர்பஜன் சிங்கின் பல சாதனைகளை அஸ்வின் முறியடித்துள்ளதால், அவரது பெயரை இப்படி விட்டுவிட்டாரா என ரசிகர்கள் கேள்வி கேட்டு விமர்சித்து வருகின்றனர்..