கர்வா சௌத் திருவிழாவிற்கு முன்பு மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள நந்தா நகரில் ஒரு வியப்பூட்டும் சம்பவம் நடைபெற்றது. நகர்ப்புற நிர்வாகத் துறையில் பணியாற்றும் சந்தீப் ஷமி, தனது காதலியுடன் ஷாப்பிங் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அவரது மனைவி அங்கு சென்று, கணவரையும் காதலியையும் ஒன்றாக நேரில் பார்த்தார்.

இருவருக்கிடையேயான வாய்த்தகராறு வேகமாக மோதலாக மாறியது. பரபரப்பான சாலையில் சுமார் அரைமணிநேரம் கூச்சல், தள்ளுமுள்ளு, கடுமையான வாக்குவாதம் ஆகியவை நடந்தன.

 

இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகளை வழிப்போக்கர்கள் தங்கள் மொபைல் போன்களில் பதிவு செய்தனர். அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில், மனைவி காதலியைப் பிடித்துக் கொண்டு கணவரிடம் கத்திக் கொண்டிருப்பதும், கணவர் விளக்க முயற்சிப்பதும் தெளிவாக காணப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.