கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே திருக்காக்கரை பகுதியில் வசிக்கும் 26 வயது இளைஞர், கடந்த சில மாதங்களாக தனது மனைவியுடன் குடும்ப தகராறால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த மனவேதனையின் பின்னணியில், அவர் எடுத்த முடிவு தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய வாட்ஸ்-அப் கணக்கில் தனது மனைவியின் நிர்வாண புகைப்படத்தை காட்சிப் படமாக வைத்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி, உடனடியாக பெரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இளைஞர் மீது ஐ.டி. சட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

விசாரணையின் போது, தனது மனைவிக்கு மற்றொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதாகவும், அந்த நபருடன் நிர்வாணமாக வீடியோ கால் பேசியதை கண்டு ரகசியமாக புகைப்படம் எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மனைவியின் மீது ஏற்பட்ட கோபம் காரணமாகவே அந்தப் புகைப்படத்தை வாட்ஸ்-அப் டிபி-யாக வைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.