மழைக்காலம் தொடங்கியதுடன், பாம்புகள் வெளியில் அதிகம் தோன்றும் காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் பெரிதும் பரவலாகி வருகின்றன. பல்வேறு பாம்பு வீடியோக்கள் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. பொதுவாக, பாம்புகளைப் பார்த்தால் பொதுமக்கள் பயந்துவிடுவார்கள்.
பொதுவாக, மழைக்காலம் என்பது பாம்புகளின் இணைத் தேடல் பருவமாகும். குறிப்பாக ஆண் பாம்புகள் இப்பொழுது துணையைத் தேடி நகர்வதைக் காணலாம். சில நேரங்களில், பாம்புகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும் காட்சியை காணலாம்.
View this post on Instagram
இந்த நிலையில், கருப்பு மற்றும் பழுப்பு நிற நாகப்பாம்புகள் இணைந்து காணப்படும் அரிய வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பச்சை மரங்களுக்கு மத்தியில், இரண்டு பாம்புகளும் பின்னிப் பிணைந்து காணப்படும் காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அரிய தருணத்தைப் பார்த்த சிலர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். இதன் காரணமாக, அந்த வீடியோ பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. பாம்புகள் ஒருங்கிணைந்து நடக்கும் இந்த இயற்கை நிகழ்வு உண்மையில் அற்புதமானதாகவும், அரிதாகவே காணப்படும் நிகழ்வாகவும் நெட்டிசன்களால் வர்ணிக்கப்படுகிறது.
