பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, முதல் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் தனக்கு சாதகமான சூழல் இல்லாததை பாஜக உணர்ந்துள்ளது. இதனால் தற்போது மத கலவரத்தை தூண்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதில் உச்சகட்டமாக பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியுள்ளார். முஸ்லீம்கள் மீதான பிரதமர் மோடியின் இந்த வெறுப்பு பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

அவருடைய இந்த பேச்சு அவரின் சிந்தனையில் நிறைந்திருக்கும் ஆர்எஸ்எஸ் கோட்பாட்டை தெளிவுபடுத்துகிறது. ஆர் எஸ் எஸ் தொட்டிலில் வளர்ந்த பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக உயர்ந்த பிறகும் இப்படி பேசி வருகிறார். அவர் தன்னுடைய ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பை கக்கியுள்ளார். இது கடுமையான கண்டனத்திற்குரியது. பிரதமரின் பேச்சுக்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக நாட்டு மக்கள் அவருக்கு கண்டிப்பாக தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். மேலும் ஆட்சி அதிகாரத்திலிருந்து பாஜக தூக்கி எறியப்படும் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.