கர்நாடக மாநிலம் ஹாசன் தாலுகா முக்கந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரது மனைவி ஹர்ஷிதா, தனது 7 வயது மகனையும் கணவரையும் தவிக்கவிட்டு, சச்சின் என்ற தனது காதலனுடன் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணமான இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், கடந்த மாதம் மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற ஹர்ஷிதா வீடு திரும்பவில்லை. போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் காதலனுடன் சென்றது தெரியவந்ததையடுத்து, காவல் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட சமரசப் பேச்சுவார்த்தையில், ஹர்ஷிதா தனது பெற்றோரின் கெஞ்சலுக்கு இணங்கி மீண்டும் கணவருடன் செல்ல ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், கணவருடன் அனுப்பி வைக்கப்பட்ட அடுத்த நாளிலேயே ஹர்ஷிதா மீண்டும் தனது காதலன் சச்சினுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இம்முறை அவர் தனது காதலனுடன் காரிலேயே மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டதோடு, அது தொடர்பான வீடியோவையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். ஒரு தாயாக தனது 7 வயது மகனின் எதிர்காலத்தைக் கூடக் கருத்தில் கொள்ளாமல், கணவரைத் தவிக்க விட்டுவிட்டு பெண் எடுத்த இந்த முடிவு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.