ரயில்வே கேட் மூடும்போது அவசரம் என்ற பெயரில் அத்துமீறி உள்ளே நுழைந்து ஒரு பேருந்து மாட்டிக்கொள்கிறது. அந்தப் பேருந்தையும் அதில் இருந்த பயணிகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், ரயில்வே ஊழியர்கள் ரயிலையே நிறுத்திவிட்டு கேட்டைத் திறக்கிறார்கள். ஆனால், அங்கே நடந்ததோ உச்சக்கட்ட கொடுமை. மாட்டிக்கொண்ட பேருந்து வெளியே வந்த அடுத்த நொடியே, எதிர் திசையில் நின்ற மற்ற வாகன ஓட்டிகள் “சரிதான் வழி கிடைச்சிருச்சு” என்று மீண்டும் ரயில்வே கேட்டுக்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைகிறார்கள்.

​மக்களின் உயிர் மீது அவர்களுக்கே அக்கறை இல்லாதது வேதனையாக இருக்கிறது. ஒருவேளை ரயில் வந்து மோதியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? காப்பாற்ற நினைத்தவர்களின் முயற்சியைக் கூட மதிக்காமல், கொஞ்சமும் விவேகம் இல்லாமல் இப்படி அராஜகம் செய்வது சுத்தக் கோழைத்தனம். சட்டத்தின் மீதோ, உயிரின் மீதோ பயமில்லாத இத்தகைய கீழ்த்தரமான மனநிலைதான் பல விபத்துகளுக்குக் காரணமாகிறது.