புதுவருடப் பிறப்பை முன்னிட்டு சாலையில் இளைஞர் ஒருவர் செய்த அராஜகம் சமூக வலைதளங்களில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்ற காரை வழிமறித்து, ‘தளபதி’ விஜய்யின் மாஸ் பாடலுக்கு அவரைப் போலவே நடனமாடி போக்குவரத்தை முற்றிலும் முடக்கியுள்ளார் அந்த இளைஞர். கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, காரின் முன்னால் அவர் ஆடிய ஆட்டம் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.
போலீஸ் வந்ததும் எடுத்தேன் பாரு ஓட்டம் 🤣🤣🤣 எதுக்கு இந்த வெட்டி சீன் #தற்குறி_விஜய்_கழகம் pic.twitter.com/9VLYyp0JIu
— JANU (@ShekarJanani) January 1, 2026
ஆனால், இந்த “தளபதி” அவதாரம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. திடீரென அந்த இடத்திற்கு ரோந்து வந்த காவல்துறையினரைக் கண்டதும், ஆடிக்கொண்டிருந்த அந்த இளைஞர் அடுத்த நொடியே ஆட்டம் பாட்டம் அனைத்தையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு, “தப்பித்தோம் பிழைத்தோம்” என அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஓடி மறைந்துவிட்டார். இந்த வேடிக்கையான மற்றும் அதிர்ச்சியூட்டும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
