இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகளின் வீடியோக்கள் அதிக அளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளில் அதிகமாக மனிதர்களுடன் ஒன்றிணைவது நாயும் பூனையும் தான்.

இவை வீட்டில் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை. இந்த நிலையில் அழகு ராணி போட்டி நிகழ்ச்சியை தயாராவது போல கண்ணாடி முன் அமர்ந்து நாய் ஒன்று போஸ் கொடுக்கிறது. கால்களை மாற்றி மாற்றி போஸ் கொடுத்து தன்னைத் தானே ரசித்துக்கொண்டு பார்க்கிறது. அதன் பிறகு குட்டியான பை ஒன்றை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கிறது. இந்த காட்சியை பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் வியப்பாகவும் உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Dog Lover இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@pupthecompanion)