மாடித்தோட்டம் அமைக்க வேண்டும் என எண்ணுபவர்கள் முதலில் குறைந்த நாட்களில் அறுவடை செய்யக்கூடிய காய்கறி வகைகளை நடவு செய்ய வேண்டும். அந்த வகையில் பார்த்தால் கீரை வகைகள், வெண்டைக்காய் போன்றவைகள் நடலாம். இதை நடவு செய்வதால் பூச்சி தாக்குதல் பெரிதளவில் இருக்காது.
முதலில் நீங்கள் எந்த செடி வைத்தாலும் முதலில் செய்ய வேண்டியது சின்ன வெங்காயத்தை நட வேண்டும் அப்போது தான் நோய் தாக்குதலை தவிர்க்கலாம். கீரையை நடவு செய்தால் 25 நாட்களில் அறுவடை செய்து பயன்படுத்த முடியும். முள்ளங்கி, கொத்தவரை போன்றவற்றை அறுவடை செய்ய 45 நாட்களாகும்.