பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் போலீசார் தாக்கியதில் வலது கை உடைந்ததாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, சவுக்கு சங்கரை மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.