2023 ஐசிசி உலகக் கோப்பையில் இந்தியாவின் செயல்திறன் மற்றும்  சமீபத்திய வெற்றியைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

ஐ.சி.சி உலகக் கோப்பை 2023: 2023 ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது, இது வரை தோல்வியடையாமல் தனது தொடர் வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. 

வாசிம் அக்ரமின் பாராட்டு: இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதில் தற்போதைய நிலையில் இந்திய அணியினர் “யாராலும் தடுக்க முடியாதவர்கள்” பிரேக் தோல்வியடைந்த ரயில் தறிகெட்டு ஓடுவது போல உலகக்கோப்பையில் இந்தியா அதிவேகமாக நிற்காமல் முன்னேறி வருவதாக  அவர் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செயல்திறன்:  பெரும்பாலும் “சேஸ் மாஸ்டர்” என்று அழைக்கப்படும் விராட் கோலி, கடந்த போட்டிகளில்   சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும்,அதே போல், காயம்பட்ட அல்லது ஃபார்மில் இல்லாத வீரர்களுக்கு தரமான மாற்று வீரர்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட வாசிம் அக்ரம், இந்திய அணியின் இந்த வளைந்து கொடுக்கும் தன்மையானது, ஆட்ட சூழ்நிலை மற்றும் எதிரணிக்கு ஏற்ப அணியை சரிசெய்யது கொள்ள பெரிதும் உதவுவதாக தெரிவித்துள்ளார்.