தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் 24-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இன்று (செப்டம்பர் 19) சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்யக்கூடும் என்பதால், அந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
