குஜராத்தின் ஹல்வத் நகரில் உள்ள சாந்தீபனி ஆங்கிலப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு ‘நிலைமின்வியல்’ தத்துவத்தை செயல்முறை விளக்கம் மூலம் கற்பித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பரிசோதனையில், ஒரு போர்வையை இரண்டு மாணவிகளின் தலைமுடியில் தேய்க்கும்போது, உராய்வினால் ஏற்படும் மின்சுமை காரணமாக அவர்களின் தலைமுடி தானாகவே செங்குத்தாக எழுந்து நிற்கிறது.

மேலும் புத்தகத்தில் உள்ள பாடங்களை வெறும் மனப்பாடம் செய்ய வைக்காமல், விளையாட்டின் மூலம் அறிவியல் உண்மைகளை ஆசிரியர் விளக்கிய விதம் காண்போரை வியக்க வைத்துள்ளது. சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோ, கல்வி என்பது தேர்வுகளுக்காக மட்டுமின்றி ஆர்வத்தைத் தூண்டுவதற்காகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Mayur Vaishnav (@sciencewithmayur)

“>

இந்நிலையில் மாணவர்கள் சிரித்து மகிழ்ந்தபடி அறிவியலைக் கற்றுக்கொள்ளும் இந்தக் காட்சிக்கு இணையதளவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆசிரியர்கள் இது போன்ற ஆக்கப்பூர்வமான முறைகளைக் கையாண்டால், மாணவர்களுக்கு அறிவியல் மீதான பயம் நீங்கி கற்றல் என்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக மாறும் என பலரும் பாராட்டி வருகின்றனர்.