உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஒரு ஓட்டுநருக்கு கிடைத்த வினோதமான மற்றும் அதிர்ஷ்டமான அனுபவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிகாலை 4 மணியளவில் பழைய பேருந்து நிலைய மேம்பாலத்தில் கார் பழுதடைந்த நிலையில் நின்றிருந்த ஒரு தொழிலதிபர், தனது ஆடி Q3 காரை ஒரு மணி நேரம் பாதுகாப்பதற்காக ஒரு கேப் ஓட்டுநரை அணுகியுள்ளார்.

இந்நிலையில் எரிபொருள் வாங்குவதற்காக வேறு வாகனத்தில் செல்ல வேண்டியிருந்ததால், காரைப் பார்த்துக் கொள்ளும் பணிக்காக அந்த ஓட்டுநருக்கு 3,500 ரூபாயை வழங்கியுள்ளார். ஆரம்பத்தில் இதனை நம்பாத ஓட்டுநர், அந்த நபர் உடனடியாக ஆன்லைனில் முன்பணம் அனுப்பியதும் ஒப்புக்கொண்டு, நேர்மையுடன் அந்த காரைக் காவல் படுத்தியுள்ளார்.

“>

மேலும் சாதாரண கார் ஓட்டுநரின் நேர்மையும், முன்பின் தெரியாத ஒரு நபரிடம் தன் விலையுயர்ந்த காரை ஒப்படைத்த அந்த தொழிலதிபரின் நம்பிக்கையும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தனது அனுபவத்தை வீடியோவாகப் பதிவு செய்த ஓட்டுநர், அந்த கார் உரிமையாளர் ஒரு நிறுவனத்தின் முதலாளி என்பதையும், கார் மிகவும் ஆடம்பரமாக இருந்ததையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து பேஸ்புக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருவதோடு, நேர்மைக்கு எப்போதும் தகுந்த வெகுமதி உண்டு என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.