நாட்டின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையில், ‘தேசிய கௌரவ பாதுகாப்பு திருத்த மசோதா’ நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மத்திய உள்துறை இணையமைச்சர் அவையில் தாக்கல் செய்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேசியக் கொடி, தேசியக் கீதம் மற்றும் அரசியலமைப்பு சாசனம் ஆகியவற்றிற்கு அளிக்கப்பட்டு வரும் சட்டப்பூர்வ பாதுகாப்பும் அந்தஸ்தும், தேசியப் பாடலான வந்தே மாதரத்திற்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.

இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுச் சட்டமானால், தேசியக் கொடி மற்றும் தேசியக் கீதத்திற்கு இணையான சட்டப்பூர்வப் பாதுகாப்பை ‘வந்தே மாதரம்’ பாடலும் பெறும். இதன் மூலம் தேசியப் பாடலை அவமதிப்போருக்கு சட்டப்படி கடுமையான தண்டனைகள் வழங்க வழிவகை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.