திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி கோவில் அறங்காவலர் குழு அல்லது ஆன்மீகம் சார்ந்த கமிட்டிகளில் நியமிக்கப்பட்டதற்கு எதிராக சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமான விளக்கமளித்துள்ளார்.

வெளி உலகத்திற்கு அவர் ஒரு தயாரிப்பாளராக மட்டுமே தெரிந்தாலும், ஆன்மீகப் பணிகளில் அவரது குடும்பம் செய்துள்ள சாதனைகள் பலருக்குத் தெரியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அர்ச்சனா கல்பாதியின் குடும்பத்தினர் தமிழகம் முழுவதும் உள்ள பத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்களின் கும்பாபிஷேகப் பணிகளைத் தங்களது சொந்த நிதியைக் கொண்டு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு பாரம்பரியக் கோயில்களின் சீரமைப்புப் பணிகள் மற்றும் திருப்பதிக் கட்டமைப்பு வேலைகளுக்காக அவர்களது குடும்பம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களைத் தொண்டுள்ளmாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது போன்ற ஆன்மீக ஈடுபாடும் தருமசிந்தனையும் கொண்ட நபர்களை இணைப்பது, பிற்காலத்தில் மேலும் பல வள்ளல்களையும் பக்தர்களையும் கோவில் திருப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களில் பங்கெடுக்கச் செய்ய பெரிதும் ஊக்குவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“>

 

பொதுவெளியில் பரவும் எதிர்மறை விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெளியாகியுள்ள இந்த விளக்கம் தற்போது ஆன்மீக மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.