கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியை சேர்ந்த சர்ச் பாதர் ராபின்சன்க்கும் மடத்துவிளை பகுதியை சேர்ந்த சேவியர் குமாருக்கும் முன் பகை இருந்து வந்துள்ளது. இதில் சேவியர் குமார் அரசு ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இரண்டு தரப்பினராக பிரிந்து அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இன்று தகராறு கைகலப்பாக மாறிய நிலையில் சேவியர் குமாரை ராபின்சன் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தன்னை தாக்க வந்ததாக கூறி ராபின்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.